
பிரபாஸின் ஆதிபுருஷ் தாமதமாவது ஏன்? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு
அப்படி ஒரு தகவல் வெளியானதை அடுத்து, ஆதிபுருஷ் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாததோடு, சில காட்சிகளை திருப்தி இல்லாமல் ரீஷூட் பண்ணவும் படக்குழு திட்டமிடப்பட்டிருப்பதாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி பரவி வருகிறது. ஆனால் தற்போது அந்த செய்தியை மறுத்துள்ள படக்குழு ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
அதில், ஆதிபுருஸ் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் நடைபெறுகிறது என்றும், ஏற்கனவே படமாக்கிய காட்சிகளை திருப்தி இல்லாமல் ரீஷூட் செய்யப்போவதாக வெளியான தகவல் உண்மையில்லை. மறு படப்பிடிப்பு எதுவும் நடைபெறவில்லை என்றும் தெரிவித்திருக்கும் அப்படக்குழு, ஆதிபுருஷ் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மற்றும் வி.எப்.எக்ஸ் பணிகளுக்காக அதிக நேரம் தேவைப்படுகிறது. அதன் காரணமாகவே இப்படத்தின் ரிலீஸ் தேதி அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!