
வெளியானது விஜய் பாடிய ‛ரஞ்சிதமே பாடல் : கொண்டாடும் ரசிகர்கள்
இந்நிலையில் வாரிசு படத்தின் முதல் பாடலான "ரஞ்சிதமே ரஞ்சிதமே" என்ற பாடலின் லிரிக் வீடியோ இன்று(நவ., 5) மாலை 5.30 மணியளவில் வெளியானது. தமன் இசையில் விவேக் எழுதி உள்ள இந்த பாடலை நடிகர் விஜய்யே பாடி உள்ளார். அவருடன் சேர்ந்து பாடகி எம்எம் மானஸி என்பவரும் பாடி உள்ளார்.
பக்கா கிராமத்து குத்துப்பாடல் போன்று உருவாகி உள்ள இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் இந்த பாடலுக்கு விஜய், ராஷ்மிகாவின் நடனமும் ரசிகர்களை வெகுவாக கவரும் என தெரிகிறது. லிரிக் வீடியோவில் வரும் ஒரு சில காட்சிகளிலேயே இருவரும் பிரமாதமாய் நடனம் ஆடி உள்ளார். இதற்கு ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். வெளியான 15 நிமிடத்திலேயே இந்த பாடலுக்கு ரூ.5.75 லட்சம் பார்வைகள் கிடந்தன. அரைமணிநேரத்திற்குள் 10 லட்சம் பார்வைகளை கடந்தன. ரஞ்சிதமே பாடலை ரசிகர்கள் வைரலாக்கி வருவதுடன் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!