
குத்தாட்டம் போடும் ஊர்வசி ரவுத்தேலா
இதில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா ஒரு படி முன்னால் இருக்கிறார். பாலிவுட்டில் பிசியாக இருந்தபோதும் இமேஜ் பார்க்காமல் சரவணா ஸ்டோர் அண்ணாச்சிக்கு ஜோடியாக நடித்தார். அதற்கு காரணம் அவருக்கு கொடுக்கப்பட்ட கணிசமான சம்பளம்.
ஊர்வசி இப்போது ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடுவதில் அதிக அக்கறை காட்டி வருகிறார். ஏற்கெனவே சில படங்களில் குத்தாட்டம் போட்ட ஊர்வசி, தெலுங்கில் சிரஞ்சீவி நடித்து வரும் வால்டர் வீரய்யா படத்தில் குத்தாட்டம் போட இருக்கிறார். போயபதி இயக்கத்தில் ராம் பொத்தனேனி நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் ஆடி முடித்து விட்டார். மேலும் இரண்டு தெலுங்கு படங்களில் ஆட ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. தமிழிலும் சில படங்களில் ஆடுவதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!