
ஐஸ்வர்யா இயக்கும் ‛லால் சலாம் - ரஜினி சிறப்பு வேடத்தில் நடிக்கிறார்
இந்த படத்திற்கு லால் சலாம் என பெயரிட்டுள்ளனர். இந்த படத்தின் பூஜை இன்று(நவ., 5) காலையில் நடந்தது. அதோடு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். அதில் கிரிக்கெட் பேட், பால், ஹெல்மெட் போன்றவை எரிவது போன்றும், பின்னணியில் கலவரம் நடந்த இடம் போன்றும் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தபடம் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திய படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
லால் சலாம் படம் மூலம் முதன்முறையாக தனது அப்பாவை இயக்குகிறார் ஐஸ்வர்யா. ஏற்கனவே இவரது தங்கை சவுந்தர்யா, ‛கோச்சடையான்" படம் மூலம் ரஜினியை இயக்கினார். இப்போது ஐஸ்வர்யாவுக்கும் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!