
புதுமுகங்கள் உருவாக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் ஐமா
படம் பற்றி இயக்குனர் ராகுல்.ஆர்.கிருஷ்ணா கூறியதாவது: இது சர்வைவல் சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம். ஐமா எனும் சொல்லில் (ஐ ) எனும் எழுத்து தெய்வத்தையும் (மா) எனும் எழுத்து வலிமையையும் குறிக்கிறது ஆகவே ஐமா எனும் சொல் இறைவனின் வலிமை என்று பொருள்.
எந்த உயிர்களுக்கும் தீங்கு நினைக்காத இருமனிதர்கள் தங்களுக்கு ஏற்படும் தடைகளையும் துரோகங்களையும் ஏமாற்றங்களையும் எதிர்கொள்ளும் சுவாரசியத்தை சொல்லும் படம். பல தடைகளை தாண்டி என் கதையை திரைப்படமாக கொண்டு வந்துள்ளேன். படத்தை பார்ப்பவர்கள் சில வினாடிகள் கவனம் சிதறி காட்சியை பார்க்காமல் தவறினால் படத்தின் கதையே புரியாமல் போகும் வாய்ப்பும் உண்டு. 9 கதாபாத்திரங்களை சுற்றித்தான் இந்த கதையே நடக்கிறது. இதன் படப்பிடிப்பு கேரளாவில் குட்டிக்காணம், குமுளி, பாலக்காடு போன்ற பகுதியில் நடைபெற்றுள்ளது. என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!