
சமந்தாவுக்கு பயிற்சி அளித்த ஹாலிவுட் சண்டை இயக்குனர்
படத்தின் சண்டை காட்சிகளை ஹாலிவுட் சண்டை இயக்குனர் யானிக் பென் வடிவமைத்துள்ளார். இவர் ஏற்கெனவே சமந்தா நடித்த பேமிலி மேன் வெப் தொடரில் சமந்தாவுக்கு சண்டை காட்சிகள் அமைத்தவர். டிரான்ஸ்போர்ட்டர் 3, கிறிஸ்டோபர் நோலனின் இன்செப்ஷன், டன்கிர்க், ஷாருக்கானின் ரயீஸ், சல்மான் கானின் டைகர் சிந்தா ஹை உள்ளிட்ட பல படங்களில் பணிபுரிந்துள்ளார்.
”சமந்தா போன்று துணிச்சலும் அர்ப்பணிப்பும் மிக்க நடிகையை நான் கண்டது இல்லை. எத்தகைய ரிஸ்க்கையும் அவரே எடுக்க முன்வந்தார். டூப் தேவைப்படும் காட்சியில்கூட அவர் அதற்கு அனுமதிக்கவில்லை. இன்னொருவர் உழைப்பில் கிடைக்கும் புகழும், கைதட்டலும் எனக்கு வேண்டாம் என்று சொன்னார்” என சமந்தாவை புகழ்ந்து தள்ளுகிறார் யானிக் பென்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!