
ரூ.300 கோடி வசூலைக் கடந்த காந்தாரா
இந்த ஆண்டிலேயே மற்றுமொரு கன்னடப் படம் வசூல் சாதனையைப் படைக்கும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். "கேஜிஎப் 2" படத்தை பான் இந்தியா படமாக வெளியிட்டு வெளியான மொழிகளில் நிறையவே புரமோஷன் செய்தார்கள். ஆனால், "காந்தாரா" படம் கன்னடத்தில் மட்டுமே முதன் முதலில் வெளியானது. இரண்டு வாரங்களுக்குப் பிறகே மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டார்கள். இருந்தாலும் வெளியான அனைத்து டப்பிங் மொழிகளிலும் கூட நல்ல வசூலைப் பெற்று வருகிறது.
உலக அளவில் தற்போது இந்தப் படம் ரூ.300 கோடி வசூலைக் கடந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.280 கோடி வசூலையும், வெளிநாடுகளில் ரூ.20 கோடிக்கும் அதிகமான வசூலையும் பெற்று ரூ.300 கோடி சாதனையைப் புரிந்துள்ளது. இப்படத்தின் வெற்றி பிராந்திய அளவிலான கலாச்சாரங்களை வெளிப்படுத்தக் கூடிய படங்களுக்கு இப்போதும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது என்பதை உணர்த்தியிருக்கிறது.
இனி, அந்தந்த மொழி, மாநில, கலாச்சாரப் படங்களை நிறைய எதிர்பார்க்கலாம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!