
‛கட்டா குஸ்தி விளையாட்டு படம் அல்ல: விஷ்ணு விஷால்
படம் பற்றி விஷ்ணு விஷால் கூறியதாவது: மல்யுத்தம் போன்றதுதான் கட்டா குஸ்தி. மணல் வெளியில் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் விளையாட்டு. தமிழ்நாட்டில் சேலம், கோவை, பொள்ளாச்சி பகுதியில் இன்னும் இந்த விளையாட்டுகள் நடந்து வருகிறது. இந்த விளையாட்டின் பின்னணியில் படம் உருவாகி உள்ளது. ஆனாலும் இது விளையாட்டு படம் அல்ல. கணவன் மனைவிக்கு இடையிலான ஈகோவை காமெடியாக சொல்லும் படம்.
இந்த படத்தின் கதை 2 ஆண்டுகளுக்கு முன்பே தயாராகி விட்டது. சில தயாரிப்பாளர்கள் கதை கேட்டுவிட்டு பெரிய பட்ஜெட் தேவைப்படும் என்ற தயங்கினர். அதனால் தான் நானே தயாரிக்க முடிவு செய்தேன். படத்தின் கதையை கேட்டுவிட்டு ரவிதேஜாவும் இணைந்து கொண்டார். அவரை படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க கேட்டோம். இது விஷ்ணு விஷால் படமாக மட்டும் இருக்கட்டும் என்று மறுத்து விட்டார். அடுத்து நேரடி தெலுங்கு படத்தில் அவரும் நானும் இணைந்து நடிக்க வாய்ப்பிருக்கிறது.
என் மனைவிக்கு நான் தெலுங்கில் பெரிய ஸ்டாராக வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அவரது முயற்சியால்தான் இதுவெல்லாம் நடக்கிறது. இதற்காக தெலுங்கு கற்று வருகிறேன். இவ்வாறு விஷ்ணு விஷால் கூறினார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!