
ஆழ்கடல் அதிசயத்திற்கு கூட்டி செல்லும் ‛அவதார் 2 : பிரமிக்க வைக்கும் டிரைலர்
சயின்ஸ் பிக்சன் படமான இதில் கிரகங்களுக்கு இடையில் நடக்கும் சண்டை தான் கதை என்றாலும் இந்த உலகில் வாழும் பேராசை பிடித்த மனிதனுக்கும் இயற்கையோடு இணைந்து வாழும் மற்றொரு கிரக மனிதர்களுக்கும் இடையிலான மோதலை சொன்ன விதத்தில் அனைவரையும் கவர்ந்தது. இந்த படத்தின் தொடர்ச்சியாக மேலும் சில பாகங்கள் வெளிவர உள்ளன.
இதன் இரண்டாம் பாகமான "அவதார் : தி வே ஆப் வாட்டர்" வருகிற டிசம்பர் மாதம் 16ம் தேதி வெளியாகிறது. இதன் டீசர் கடந்த மே மாதம் வெளியானது. இன்று(நவ., 2) மாலையில் டிரைலரை வெளியிட்டனர்.
முதல் பாகத்தை மிஞ்சும் அளவிற்கு பல ஆச்சர்யங்கள் இந்த டிரைலரில் உள்ளன. பிரமாண்டம் உருவாக்கம், ஆச்சர்யப்பட வைக்கும் காட்சி அமைப்புகள், ஆழ்கடல் அதிசயங்கள், அதில் வாழும் உயிரினங்கள் என ஒவ்வொரு காட்சிகளும் பிரம்மிக்க வைக்கின்றன. இதை பார்க்கும் ரசிகர்கள் பலரும் டிரைலரை பாராட்டி வருகின்றனர். அவதார் 2 டிரைலர் வெளியீட்டிற்கு படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகி உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!