
ராணுவ கமாண்டராக நடிக்கும் ராகினி திவேதி
இதுகுறித்து அவர் கூறியதாவது: எனது தந்தை இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர், அதனால் இது எனது மனதுக்கு நெருக்கமான கதாபாத்திரம். நான் அண்டர்கவர் கமாண்டோவாக நடிக்கிறேன். அந்த உண்மையான தோற்றம் மற்றும் உடல் மொழி இடத்தைப் பெற என் அப்பாவை பார்த்து கற்றுக் கொண்டிருக்கிறேன். திரையில் கமாண்டோவாக நடிப்பது கடினமானது, அதனால். நான் கிக் பாக்ஸிங் உள்ளிட்ட தற்காப்பு கலைகளை கற்று வருகிறேன். மேலும் ஒரு பெண் கமாண்டோவின் தேசபக்தியை வெளிப்படுத்தும் ஆக்ஷன் காட்சிகளுக்காக துப்பாக்கி பயிற்சியும் பெற்று வருகிறேன் என்கிறார் ராகினி திவேதி.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!