
‛துணிவு டப்பிங்கை தொடங்கிய மஞ்சு வாரியர்
இந்த படத்தில் இரட்டை வேடத்தில் அஜித் நடித்துள்ளாராம். போனி கபூர் தயாரிக்கும் இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நடிகை மஞ்சு வாரியர் தனது டப்பிங்கை தொடங்கியுள்ளார். விரைவில் இந்த பணிகள் நிறைவுபெறும் என கூறப்படுகிறது.
இந்த படத்தில் சமுத்திரகனி, ஜான் கொக்கன், வீரா ஆகியோர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் பாடல் ஒன்றை அனிரூத் பாடியுள்ளார். விரைவில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!