
13 மில்லியன் பாலோயர்கள் : தென்னிந்திய நடிகர்களில் மகேஷ் பாபு தான் ‛டாப்
தென்னிந்திய நடிகர்களைப் பொறுத்தவரையில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு 13 மில்லியன் பாலோயர்களைத் தற்போது தொட்டு முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் தமிழ் நடிகரான தனுஷ் 11.1 மில்லியன் பாலோயர்களுடனும், மூன்றாவது இடத்தில் தமிழ் நடிகரான சூர்யா 8.3 மில்லியன் பாலோயர்களுடனும், நான்காவது இடத்தில் கமல்ஹாசன் 7.5 மில்லியன் பாலோயர்களுடனும், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் 7.2 மில்லியன் பாலோயர்களுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
தமிழில் அதிக வசூல் நாயகர்கள் என்ற பெயரைப் பெற்ற ரஜினிகாந்த் 6.2 மில்லியன் பாலோயர்களுடனும், விஜய் 4 மில்லியன் பாலோயர்களுடனும் பின் தங்கியுள்ளனர். நடிகர் அஜித் எந்த சமூக வலைத்தளங்களிலும் இல்லை.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!