
இப்படியும் ஒரு படத்திற்கு விளம்பரம்
திடீரென அந்தப் பதிவுகளைப் பார்த்த ரசிகர்கள் இருவரும் தாய்மை அடைந்துள்ளதாக நினைத்து அதிர்ச்சியடைந்து பல்வேறு கமெண்ட்டுகளைப் பதிவிட்டு வந்தார்கள். அதன் பிறகுதான் அது ஒரு மலையாளப் படத்திற்கான விளம்பர யுத்தி எனத் தெரிய வந்தது.
"பெங்களூரு டேஸ்" படத்தை இயக்கிய அஞ்சலி மேனன் இயக்கத்தில் நித்யா மேனன், பார்வதி திருவோத்து, பத்மப்ரியா, அம்ருதா சுபாஷ், அர்ச்சனா பத்மினி மற்றும் பலர் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போகிறார். அதற்காகத்தான் இப்படி விளம்பரப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்களாம். படத்திற்கு "வொண்டர் உமன்" எனப் பெயரிட்டுள்ளார்கள்.
தாய்மை அடைந்திருக்கும் பல பெண்களின் பிரச்சினைகளைப் பற்றி இந்தப் படம் பேசப் போகிறதாம். ஏற்கெனவே, நயன்தாரா, விக்னேஷ் சிவன் சம்பந்தப்பட்ட வாடகைத் தாய் விவகாரம் ஒரு பக்கம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் நேற்றைய பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தின. அதோடு, சமந்தா நடித்து அடுத்த மாதம் வெளிவர உள்ள "யசோதா" படத்தின் டிரைலரும் வாடகைத் தாய் விவகாரத்தை பேசும் படமாக இருக்கும் என அதன் டிரைலர் மூலம் தெரிகிறது. "வொண்டர் உமன்" படமும் பரபரப்பை ஏற்படுத்தும் படமாக அமையலாம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!