
இன்று ஒரே ரிலீஸ், அடுத்த வாரம் கடும் போட்டி
கடந்த வாரம் தீபாவளியை முன்னிட்டு "சர்தார், பிரின்ஸ்" படங்கள் ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வெளிவந்தன. அதற்கு முன் வெளியாகிய "பொன்னியின் செல்வன், காந்தாரா" படங்கள் குறிப்பிட்ட அளவில் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கின்றன. தீபாவளி வெளியீடுகள் வெளிவந்து இன்றுடன் ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில் இன்று வெள்ளிக்கிழமை "காலங்களில் அவள் வசந்தம்" என்ற, ஒரே ஒரே படம் மட்டுமே வெளியாகி உள்ளது.
அதே சமயம் அடுத்த வாரம் நவம்பர் 4ம் தேதி “லவ் டுடே, காபி வித் காதல், நித்தம் ஒரு வானம்" ஆகிய மீடியம் பட்ஜெட் படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் "லவ் டுடே, காபி வித் காதல்" படங்களை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
தற்போது தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கும் தீபாவளி படங்கள், தீபாவளிக்கு முன்பு வெளிவந்த படங்கள் நவம்பர் 3 வரை தாக்குப் பிடிக்க முடியும். எனவே, நவம்பர் 4 அன்று வெளியாகும் படங்களுக்கு நல்ல தியேட்டர்கள் கிடைக்கலாம். மேலும், சில படங்கள் அன்றைய போட்டியில் சேரவும் வாய்ப்புண்டு.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!