
எனக்கு நாளை திருமணம்: ஹரிஷ் கல்யாண்
இந்நிலையில், நாளை (அக்டோபர் 28) திருமணம் நடைபெற உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். அவர் நமது தினமலர் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: இது வீட்டில் பார்த்து நிச்சயம் செய்த திருமணம் தான். சென்னையில் பிறந்த நர்மதா தற்போது ஸ்டார்ட்-அப் தொழில் செய்து வருகிறார். இரண்டு பேருக்கும் நிறைய விஷயங்கள் பிடித்திருந்தது. நாளை இருவரும் சந்தோஷமாக இந்த பயணத்தை துவங்க இருக்கிறோம். அடுத்ததாக நான் நடித்து வரும் படம் ‛டீசல்". முழுக்க முழுக்க ஆக்சன் படமான இதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!