
நவ., 25ல் ‛ஏஜென்ட் கண்ணாயிரம் ரிலீஸ்
அக் 26, 2022
Advertisement
குலு குலு படத்திற்கு பின் சந்தானம் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‛ஏஜென்ட் கண்ணாயிரம்". ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன் நாயகிகளாக நடிக்க முனீஷ்காந்த், புகழ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மனோஜ் பிதா இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸிற்கான பணிகள் நடந்து வந்தன. நவம்பரில் இந்த படம் வெளியாகும் என ஏற்கனவே அறிவித்த நிலையில் தேதியை குறிப்பிடாமல் இருந்தனர். இப்போது நவ., 25ல் இந்த படம் வெளியாவதாக அறிவித்துள்ளனர். காதல், காமெடி, ஆக் ஷன் கலந்து இந்த படம் உருவாகி உள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!