
ஜேம்ஸ் பாண்டுக்கு இங்கிலாந்து அரச குடும்பம் மரியாதை
கேசினோ ராயல், குவாண்டம் ஆப் சோலஸ், ஸ்கைபால், ஸ்பெக்டர், நோ டைம் டூ டை ஆகிய படங்களில் ஜேம்ஸ் பாண்டாக நடித்தார். இனி பாண்ட் படங்களில் நடிக்கப் போவதில்லை என்று அறிவித்துவிட்டார் கிரெய்க்.
இந்நிலையில் இங்கிலாந்து அரச குடும்பத்தால் சினிமா மற்றும் நாடகத் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும், "தி ஆர்டர் ஆப் செயின்ட் மைக்கேல்" மற்றும் "செயின்ட் ஜார்ஜ்" பட்டம் டேனியல் கிரெய்கிற்கு வழங்கப்பட்டது. மறைந்த ராணியின் மகள் இளவரசி ஆனி, அவருக்கு இந்த பட்டத்தை இங்கிலாந்து அரண்மணையில் நடந்த விழாவில் வழங்கினார்.
ஏற்கெனவே டேனியல் கிரெய்க், பிரிட்டிஷ் ராயல் கடற்படையின் கவுரவ தளபதியாக, கடந்த 2021ம் வருடம் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!