
துணிவு படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர் கொடுத்த அதிர்ச்சி!
இந்நிலையில் தற்போது அஜித் நடித்துள்ள துணிவு படம் பொங்கலுக்கு திரைக்கு வருவதாக கூறப்படும் நிலையில், அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து இன்னும் வெளியிடப்படவில்லை. இதன் காரணமாகவே அப்படம் குறித்த அப்டேட் கேட்டு சோசியல் மீடியாவில் அஜித் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த நேரத்தில் புதுச்சேரியை சேர்ந்த ஒரு அஜித் ரசிகர், ‛ஏகே 61" அப்டேட் என்று தனது கையில் பிளேடால் எழுதி அதனை பகிர்ந்திருக்கிறார். இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ரசிகர்களின் இது போன்ற செயலை அஜித்குமார் விரும்புவதில்லை என்பதால் அந்த பதிவை அஜித் ரசிகர்கள் தற்போது நீக்கி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!