
அல்லு அர்ஜுன் - ராம்சரண் படத்திற்கு தயாராக இருக்கும் டைட்டில்
இதுபற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் அல்லு அரவிந்த் கூறும்போது, “ராம்சரண், அல்லு அர்ஜுன் இருவரையும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க வைக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. இவர்கள் நடிக்க உள்ள படத்திற்கு "சரண் அர்ஜுன்" என டைட்டிலை கூட ஏற்கனவே நான் முடிவு செய்து, அதை முறைப்படி பதிந்து வைத்து வருடந்தோறும் புதுப்பித்தும் வருகிறேன். இவர்கள் இருவரது கூட்டணியில் உருவாகும் படம் மாஸாக இருக்கும். நிச்சயம் வரும் நாட்களில் இந்த படம் உருவாகியே தீரும்” என்று தனது ஆசையை தெரிவித்துள்ளார்.
ராம்சரணும் அல்லு அர்ஜுனும் நெருங்கிய உறவினர்கள் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அதேசமயம் இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான எவடு என்கிற படத்தில் நடித்து இருந்தார்கள். ஆனால் இருவரும் ஒரு காட்சியில் கூட ஒன்றாக இணைந்து நடிக்கவில்லை. காரணம் கதைப்படி அல்லு அர்ஜுன் கதாபாத்திரம் ஒரு விபத்தில் சிக்கி அவருக்கு முக அறுவை சிகிச்சை செய்யும்போது அவருக்கு ராம்சரண் உருவம் கிடைப்பதாகவும் அதன் பிறகு ராம்சரணை வைத்து கதை நகர்வதாகவும் அந்த படம் உருவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!