
கார்த்தியின் சர்தார் பட விழாவில் நாகார்ஜுனா
"பிரின்ஸ்" படத்தை தெலுங்கு இயக்குனரான அனுதீப் இயக்கி உள்ளார். தெலுங்கு படத்திற்கான வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா, இயக்குனர் ஹரிஷ் சங்கர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இன்று "சர்தார்" தெலுங்கு படத்திற்கான வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்வு இன்று ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. அதில் நடிகர் நாகார்ஜுனா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். "தோழா" படத்தில் நாகார்ஜுனா, கார்த்தி இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
தமிழில் மோதிக் கொள்ளும் "சர்தார், பிரின்ஸ்" படங்கள் தெலுங்கிலும் மோதிக் கொள்கின்றன. கார்த்திக்கு தெலுங்கில் ஏற்கெனவே நல்ல அறிமுகம் உண்டு. சிவகார்த்திகேயனின் சமீபத்திய படங்கள்தான் தெலுங்கில் டப்பிங் ஆகி வெளியாகின்றன. இரண்டு மொழிகளிலும் இந்தப் படங்கள் எப்படி வரவேற்பைப் பெறப் போகின்றன என்பதைப் பார்க்க ரசிகர்களும், திரையுலகினரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!