
சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் விழாவில் விஜய் தேவரகொண்டா
மேலும், வரும் அக்டோபர் 21ம் தேதியன்று தெலுங்கிலும் வெளியாக உள்ள இப்படத்திற்கான பேட்டிகளைக் கொடுக்க படக்குழுவினர் ஐதராபாத் சென்றுள்ளனர். காலை முதலே அந்த வேலைகள் நடந்து வருகிறது. இன்று மாலை நடைபெற உள்ள விழாவில் சிறப்பு விருந்தினர்களாக "லைகர்" கதாநாயகன் விஜய் தேவரகொண்டா, "பாகுபலி" வில்லன் ராணா டகுபட்டி, பிரபல இயக்குனர் ஹரிஷ் சங்கர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
சிவகார்த்திகேயனைப் போலவே எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் சுயமாக முன்னேறியவர்தான் தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா. அதனால், அவர் இன்று சிவகார்த்திகேயனின் "பிரின்ஸ்" பட விழாவில் கலந்து கொள்வது பொருத்தமாக இருக்கும் என டோலிவுட்டிலும் பேசிக் கொள்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!