
புதுமுகங்களின் வாய்ப்பில்ல ராஜா
படம் பற்றி அவர் கூறியதாவது: கிராமிய பின்னணியில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து இதன் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. கல்லூரிக்கு சென்று படிக்கும் நாயகியை, அதே ஊரைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் காதலிக்கிறான். இந்நிலையில் அந்த ஊருக்கு கிராம நிர்வாக அதிகாரியாக நாயகன் வருகிறார். உள்ளூர் இளைஞனை காதலிக்கும் நாயகி, கிராம நிர்வாக அதிகாரி மீது தன் காதல் பார்வையை வீசுகிறார். இதனால் ஆத்திரமடைந்த உள்ளூர் இளைஞன், அவர்களின் காதலை பிரிக்க திட்டமிடுகிறார் அந்தத் திட்டம் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதுதான் திரைக்கதை.
இன்றைய வேகமான உலகத்தில் தினம் தினம் ஒவ்வொரு வயதினரும் வெவ்வேறு வகையான மன அழுத்தங்களுக்கும், மன உளைச்சல்களுக்கும் ஆளாகிறார்கள். அவர்களுக்கு இதுபோன்ற காமெடி படங்கள் தேவைப்படுகிறது. ஒரு அரசியல் தலைவர் அடிக்கடி மேடையில் உச்சரிக்கும் வாய்ப்பில்ல ராஜா என்ற வாக்கியம் பிரபலம் என்பதால் படத்திற்கு தலைப்பாக அதனை வைத்திருக்கிறோம். என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!