
ஜான்ஸி - ஆக்ஷன் ஹீரோயின் ஆக அஞ்சலி
இயக்குனர் விஷ்ணுவர்தன் தம்பி நடிகர் கிருஷ்ணா தயாரித்துள்ள இந்தப் படத்தை திரு இயக்கியுள்ளார். இவர் விஷால் நடித்த "தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன்" மற்றும் கார்த்திக், கௌதம் கார்த்திக் நடித்த "மிஸ்டர் சந்திரமௌலி ஆகிய படங்களையும், தெலுங்கில் கோபிசந்த் நடித்த "சாணக்யா" படத்தையும் இயக்கியவர்.
தன்னுடைய பழைய ஞாபகங்களை இழந்த அஞ்சலியை சிலர் துரத்துகிறார்கள். அவர்கள் எதற்காகத் துரத்துகிறார்கள் , அது அஞ்சலியை எப்படி பாதிக்கிறது என்பதுதான் படத்தின் கதையாம். ஓடிடியில் வரும் எந்த மொழிப் படமாக இருந்தாலும் பின்னர் மற்ற மொழிகளிலும் டப்பிங் ஆகி வெளியாவதுண்டு. அந்த விதத்தில் இந்தப் படமும் தமிழில் வெளியாகலாம்.
அஞ்சலி தற்போது தெலுங்கில் ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடிக்கும் படத்திலும், தமிழில் நிவின் பாலி ஜோடியாக, ராம் இயக்கத்தில், "ஏழு கடல் ஏழு மலை" படத்திலும் நடித்து வருகிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!