
கேஜிஎப் நாயகனை இயக்கும் லோகேஷ் கனகராஜ்
அக் 17, 2022
Advertisement
கமலின் விக்ரம் படத்தை அடுத்து விஜய் நடிக்கும் 67 ஆவது படத்தை இயக்குவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்குகிறது. மேலும் விஜய் நடிக்கும் படத்தை முடித்ததும் கேஜிஎப் பட நாயகன் யஷ் நடிக்கும் படத்தை இயக்குவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதிரடி ஆக்சன் கதையில் உருவாகும் இந்த படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக இதற்கு முன்பு யஷ் நடித்த கேஜிஎப் படத்தைப் போன்று ஒரு மாறுபட்ட ஆக்சன் கதையில் இப்படம் உருவாக இருக்கிறது. இப்படம் குறித்த பேச்சு வார்த்தைகள் முடிந்து விட்டதாகவும் செய்தி வெளியாகியிருக்கிறது.
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!