
விக்ரம் வசூலை முறியடித்த பொன்னியின் செல்வன்
படம் வெளியான இரண்டு வாரங்களில் உலக அளவில் 400 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்று தற்போது 500 கோடியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அந்த சாதனை நிகழ்த்தப்பட்டுவிடும் என்றே பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, தமிழகத்தைப் பொறுத்தவரையில் "விக்ரம்" படத்தின் வசூல் சாதனையை மணிரத்னம் இயக்கத்தில் "பொன்னியின் செல்வன்" முறியடித்துள்ளது என செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. "விக்ரம்" படத்தின் தமிழக வசூல் 180 கோடி வரை இருந்தது. அந்த வசூலை நேற்று "பொன்னியின் செல்வன்" முறியடித்து தற்போது 200 கோடி வசூலை நோக்கி போய்க் கொண்டிருக்கிறதாம். நேற்றும், இன்றும் விடுமுறை தினம் என்பதாலும் வரும் வார வசூலுடன் சேர்த்து 200 கோடியை எளிதில் கடந்துவிடும் என்கிறார்கள்.
அப்படி கடந்தால் தமிழ்த் திரையுலக வரலாற்றில் "பொன்னியின் செல்வன்" படம் தான் முதன் முதலில் தமிழக வசூலில் 200 கோடியைக் கடந்த படம் என்ற பெருமையைப் பெறும்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!