
சஞ்ஜீவன் எப்போதும் எனக்கு சிறப்பான படம் : திவ்யா துரைசாமி
ஹீரோயினாக நடித்த முதல் படம் வெளிவருவது பற்றி திவ்யா துரைசாமி கூறியிருப்பதாவது: செய்தி வாசிப்பாளராக பணியாற்றிக் கொண்டே சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தேன். என்னை நம்பி இந்த படத்தில் இயக்குனர் மணி சேகர் வாய்ப்பு கொடுத்தார். சஞ்ஜீவன் படத்திற்குதான் முதலில் கையெழுத்திட்டேன். ஆனால், இப்போதுதான் வெளியாகிறது. எனக்கு மட்டுமல்லாது பலருக்கும் இப்படம் முதல் வாய்ப்பு கொடுத்திருக்கிறது.
இந்த படத்திற்கு பிறகு தான் ஜெய் மற்றும் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தேன். ஆனால், அப்படங்கள் முன்பே வெளியாகிவிட்டது. இருப்பினும், சஞ்ஜீவன் படம் எப்போதும் சிறப்பான படம்தான். இந்த துறைக்கு வரும் அனைவருமே சினிமாவில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்று வருபவர்கள் அவர்கள் எல்லோருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!