
ஹிந்து என்பது மதம் அல்ல தர்மம்: அமெரிக்காவில் ராஜமவுலி முழக்கம்
அதற்கு ராஜமவுலி அளித்த பதில் வருமாறு: பலரும் ஹிந்து என்பது மதம் என நினைக்கிறார்கள். அப்படியல்ல, அது தர்மம், இன்றைய காலக்கட்டத்தில் தான் அது மதம். ஆனால், ஹிந்து மதத்திற்கு முன்பு அது "ஹிந்து தர்மமாக" இருந்தது. ஹிந்து தர்மம் என்பது வாழ்க்கை முறை; அது ஒரு தத்துவம். மதமாக எடுத்துக்கொண்டு பார்த்தால் நான் ஹிந்து அல்ல.
அதே சமயம் "ஹிந்து தர்மம்" என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் நான் தீவிர ஹிந்துதான். நான் படத்தில் சித்தரிப்பது உண்மையில் பல, பல நூற்றாண்டுகள் மற்றும் யுகங்களாக இருக்கும் ஒரு வாழ்க்கை முறையைத்தான். வாழ்க்கையை எப்படி பார்க்க வேண்டும் என்பதையும், அதனால் வரும் முடிவுகள் குறித்து கவலைப்பட வேண்டாம் என்பதையும் ஹிந்து தர்மம் போதிக்கிறது. எனவே, நான் ஹிந்து தர்மத்தைப் பின்பற்றுகிறேன், இவ்வாறு அவர் பதிலளித்துள்ளார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!