
அச்சம் என்பது இல்லையே : அருண் விஜய்யுடன் இணைந்த எமி ஜாக்சன்
இந்த நிலையில் மீண்டும் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் விஜய்யின் படத்திலேயே ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் எமி ஜாக்சன். அச்சம் என்பது இல்லையே என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் . ஸ்டைலிஷ் திரில்லராக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து வெளியாகியுள்ள கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!