
ஹீரோயினாக தக்க வைப்பாரா இவானா?
படம் பற்றி பிரதீப் ரங்கநாதன் கூறியதாவது: இன்றைய காதல் மற்றும் 2கே தலைமுறையினர் எதிர்கொள்ளும் உறவு சிக்கல்களைப் பற்றி இப்படம் பேசும். மிகுந்த பொழுதுபோக்கு அம்சங்களோடு பார்வையாளர்களை ஈர்க்கும். "லவ் டுடே" என்ற தலைப்பைப் பயன்படுத்த ஒப்புதல் அளித்த சூப்பர் குட் பிலிம்ஸின் தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்கிறார்.
படத்தின் நாயகியான இவானா, பாலா இயக்கிய நாச்சியார் படத்தின் மூலம் அறிமுகமானவர். அந்த படத்தில் ஜோதிகா தான் ஹீரோயின் என்றாலும் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்திருந்தார். அதன்பிறகு பெரிய வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தர் சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்தார். தற்போது இந்த படத்தில் ஹீரோயின் ஆகியிருக்கிறார். தொடர்ந்து ஹீரோயினாக தன்னை தக்க வைத்துக் கொள்வாரா என்பது படம் வெளிவந்த பிறகு தெரியும். படம் நவம்பர் 4ம் தேதி வெளிவருகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!