
தீபாவளிக்கு தமிழில் வெளியாகும் ‛ஹர ஹர மகாதேவ்
ஜீ ஸ்டூடியோஸ் வழங்கும் இப்படத்தை இயக்குநர் அபிஜித் தேஷ்பாண்டே எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் சத்ரபதி சிவாஜி மகாராஜனாக சுபோத் பாவேயும், பாஜி பிரபு தேஷ்பாண்டேவாக ஷரத் கேல்கரும் நடித்துள்ளனர். இப்படத்தில், ஹிதேஷ் மோடாக் இசையமைப்பில் ‛வாரே சிவா" என்கிற பாடலை பாடியுள்ளார் தமிழ் பாடகர் சித் ஸ்ரீராம். வரும் அக்டோபர் 25ம் தேதி தீபாவளிக்கு மராத்தி மொழியுடன் ஹிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட ஐந்து இந்திய மொழிகளில் வெளியாகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!