
கன்டரா குழுவிற்கு கேக் அனுப்பி வாழ்த்திய சிம்பு
ரசிகர்களின் பாராட்டுக்கள், விமர்சகர்களின் வரவேற்பு, தியேட்டர்களில் நல்ல வசூல் என இந்தப் படம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. கன்னட சினிமாவில் மீண்டும் ஒரு தரமான படம் என படக்குழுவைப் பலரும் பாராட்டி வருகிறார்கள். கர்நாடகாவில் "கேஜிஎப் 2" படத்திற்குப் பிறகு இந்தப் படத்தின் வசூலும், வரவேற்பும் பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
அப்படிப்பட்ட ஒரு படத்திற்கு தமிழ் நடிகரான சிலம்பரசன் வாழ்த்து தெரிவித்து "கேக்" ஒன்றையும் அனுப்பியுள்ளார். அதை தயாரிப்பு நிறுவனத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளரான கார்த்திக் கவுடா பகிர்ந்து சிம்புவுக்கு நன்றி தெரிவித்து, இதுதான் சிம்பு எனவும் பாராட்டியுள்ளார். ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் அடுத்து தமிழ்ப் படங்களைத் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளது. விரைவில் இது குறித்து அறிவிப்புகள் வெளிவரலாம்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!