
ஹரிஷ் கல்யாணுக்கு விரைவில் டும் டும் - வருங்கால மனைவியை அறிவித்தார்
இதுதொடர்பாக ஹரிஷ் வெளியிட்ட செய்தி : ‛‛என்னுடைய குழந்தை பருவத்திலிருந்தே எந்த நிபந்தனைகளும் அற்ற அன்பையும், பாசத்தையும் என் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது. இப்போது மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் எனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு முக்கியமான பயணத்தின் தொடக்கத்தை துவங்க உள்ள மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்கிறேன். எங்கள் பெற்றோர்கள் குடும்பத்தினர் அனைவரின் ஆசியுடன் நர்மதா உதயகுமார் உடனான எனது திருமணத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்களை நாங்களே புதுப்பித்துக் கொள்ளும் இந்த புதிய வாழ்க்கை பயணத்தை துவங்கும் நேரத்தில் இப்போதும் எப்போதும் உங்கள் அனைவரிடமிருந்தும் இரட்டிப்பு ஆசீர்வாதங்களையும் அன்பையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்"" என தெரிவித்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!