
பீஸ்ட் படத்தினால் விஜய்யின் வாரிசு படத்துக்கு ஏற்பட்ட சிக்கல்
இந்நிலையில் தற்போது வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமை விற்பனையான நிலையில் தற்போது தமிழக விநியோக வியாபாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இப்படத்தின் தமிழக உரிமையை 80 கோடி ரூபாய்க்கு கொடுப்பதற்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாராக இருக்கிறார் . இதற்கு முன்பு விஜய் நடித்த மாஸ்டர் படம் தமிழகத்தில் 82 கோடி ஷேர் செய்திருப்பதால் அவர் இந்த தொகையை நிர்ணயித்துள்ளார். ஆனால் கடைசியாக விஜய் நடித்து வெளியான பீஸ்ட் படம் தமிழகத்தில் 60 கோடி மட்டுமே வசூல் செய்ததால் வாரிசு படத்தை 80 கோடிக்கு வாங்குவதற்கு வினியோகஸ்தர்கள் தயங்கி நிற்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!