
தமிழகத்தில் வெளியாகாத சிரஞ்சீவியின் காட்பாதர்
சிரஞ்சீவியின் படங்களுக்கு தமிழகத்தில் குறிப்பிடத்தக்க வரவேற்பு இருக்கும். ஆனால், "காட்பாதர்" படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகவில்லை. இங்கு "பொன்னியின் செல்வன்" படம் பெரும் வரவேற்புடன் ஓடிக் கொண்டிருப்பதால் பட வெளியீட்டை தள்ளி வைத்துள்ளதாகத் தெரிகிறது. குறைவான தியேட்டர்களில் மட்டும் வெளியானால் அது சிரஞ்சீவியின் இமேஜுக்கு சரியாக இருக்காது என்பதும் காரணமாக இருக்கலாம்.
அதே சமயம் மற்ற தெலுங்குப் படங்களான நாகார்ஜுனா நடித்துள்ள "த கோஸ்ட்" தெலுங்கிலும், தமிழ் டப்பிங்கிலும், மற்றொரு தெலுங்குப் படமான "ஸ்வாமி முத்யம்" படமும் இன்று குறைந்த அளவிலான தியேட்டர்களில் வெளியாகி உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!