
ஹிந்திக்கு செல்லும் விக்ரம்
பொன்னியின் செல்வன் படத்தைப் போலவே இந்த படமும் சரித்திர கதையில் உருவாகிறது. இதில் விக்ரம் எந்த மாதிரியான கேரக்டரில் நடிக்கிறார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. மேலும் இந்த படத்திற்கு ராஜமவுலியின் பிரமாண்ட படங்களுக்கு கதை வசனம் எழுதிய அவரது தந்தை விஜயேந்திர பிரசாத் கதை வசனம் எழுதுகிறார்.
இதற்கு முன்பு டேவிட் என்ற படத்தில் ஹிந்தியில் நடித்திருக்கிறார் விக்ரம். அதுமட்டுமின்றி தமிழில் அவர் நடித்த கந்தசாமி, இருமுகன், தாண்டவம், ஐ, காதல் சடுகுடு, 10 எண்றதுக்குள்ள, கிங், பீமா, மஜா, சாமி, அருள், அந்நியன், தில் என பல படங்கள் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!