
பொன்னியின் செல்வன் : இளம் நந்தினியாக ஆச்சரியப்பட வைத்த சாரா
கடந்த வாரம் வெளிவந்த "பொன்னியின் செல்வன்" படத்தில் இளம் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சாரா. டீன் ஏஜ் வயதில் உள்ள சாரா படத்தில் சில நிமிடங்கள் வந்தாலும் அவருடைய தோற்றமும், அழகும் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. அவரைப் பார்த்த திரையுலகினர் விரைவில் தங்களது படங்களில் கதாநாயகியாக நடிக்க வைக்க அவரை சீக்கிரமே அணுக வாய்ப்புள்ளது.
குழந்தை நட்சத்திரங்களாக தமிழில் பிரபலமாகி பின்னர் கதாநாயகியாகவும் தனி முத்திரை பதித்த நடிகைகள் தமிழ் சினிமாவில் உள்ளனர். குறிப்பாக ஸ்ரீதேவி, மீனா ஆகியோரைச் சொல்லலாம். அவர்களது வழியில் சாராவும் இடம் பிடித்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!