
தமிழில் உருவாகும் ஸ்னூக்கர் படம்
மலர் மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்குனர் பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் பயின்ற மணி சேகர் இயக்கி உள்ளார். வினோத் லோகிதாஸ், ஷிவ் நிஷாந்த், விமல் ராஜா, சத்யா என்.ஜே, யாஷின், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் ஸ்வர்ணகுமார் ஒளிப்பதிவில் தனுஜ் மேனன் இசையில் படம் உருவாகியுள்ளது.
படத்தை பற்றி இயக்குனர் மணி சேகர் கூறியதாவது: நான் இயக்குனர் பாலுமகேந்திரா சாரின் சினிமா பட்டறையில் பயின்ற மாணவன் என்பதாலே படங்களை புதுவிதமாக அணுக வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வந்துவிட்டது. இப்படம் தென்னிந்தியாவின் முதல் ஸ்னூக்கர் திரைப்படம். நான் அதிக நேரம் ஸ்னூக்கர் விளையாட்டிற்காக நண்பர்களுடன் செலவழித்திருக்கிறேன். ஸ்னூக்கர் என்றாலே சூதாட்டம், அதிக பணம் வைத்து விளையாடக் கூடியது போன்ற பேச்சுக்கள் எழுகிறது. உண்மையில் மற்ற விளையாட்டுக்களை போன்று தான் இதுவும் ஒரு விளையாட்டு.
இப்படம் இளைஞர்களை வெகுவாக கவரக்கூடிய வகையில் கதையையும் திரைக்கதையையும் வடிவமைத்துள்ளேன். ஒரு படம் என்றால் அது ஒரு ஜானரை மையமாக வைத்துக் கொண்டு அதனை உருவாக்குவார்கள். இந்த படத்தில் ரசிகர்கள் அனைத்து விதமான ஜானர்களையும் அனுபவிக்கலாம். இதில் காதல், காமெடி, திரில்லர் போன்ற விஷயங்களை ரசிகர்கள் அனுபவிக்க முடியும். அக்டோபர் 14ம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!