
13 ஆண்டுகளுக்கு பிறகு மம்முட்டி படத்தில் மீண்டும் சரத்குமார்
மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரான பி.உன்னிகிருஷ்ணன் என்பவர் இந்த படத்தை இயக்கி வருகிறார். இதற்கு முன்னதாக கடந்த 2009ல் மலையாளத்தில் வெளியான வரலாற்றுப்படமான "பழசிராஜா" படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்திருந்தார் சரத்குமார்.. பழசிராஜா கேரக்டரில் நடித்திருந்த மம்முட்டியுடன் அவரது சேனாதிபதியாக நடித்திருந்த சரத்குமாருக்கும் நிறைய பாராட்டுக்கள் கிடைத்தன. அதேபோல கடந்த 2014ல் ஆஷா பிளாக் என்கிற படத்தில் நடித்த சரத்குமார் 8 வருடத்திற்கு பிறகு மீண்டும் மலையாளத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!