
ஷாகுந்தலம் - அடுத்த சரித்திரப் பட சுற்றுப் பயணம்
இந்தப் படத்திற்கு அடுத்து தெலுங்கிலிருந்து "ஷாகுந்தலம்" என்ற சரித்திரப் படம் நவம்பர் 4ம் தேதி வெளியாக உள்ளது. தெலுங்கில் சில பல வெற்றிப் படங்களைக் கொடுத்த குணசேகர் இயக்கியிருக்கும் இப்படத்தில் சகுந்தலை கதாபாத்திரத்திலும், மலையாள நடிகர் தேவ் மோகன் துஷ்யந்தன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள்.
இப்படத்திற்கான புரமோஷன் சுற்றுப் பயணத்தை விரைவில் ஆரம்பிக்க உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளார்கள். கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களிலும், பொது நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார் சமந்தா. தற்போது இந்தப் படத்திற்காக சமூக வலைத்தளங்களில் தனது பதிவுகளை பதிவிட ஆரம்பித்துள்ளார். புரமோஷன் சுற்றுப் பயணத்திலும் அவர் கலந்து கொள்ள உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!