
பொன்னியின் செல்வன் - ஆச்சரியப்பட்ட ராஜமவுலி
“சமீபத்தில் இயக்குனர் ராஜமவுலியைச் சந்தித்தேன். அவரிடம் "பொன்னியின் செல்வன்" படத்தின் இரண்டு பாகங்களையும் நாங்கள் 150 நாட்களில் எடுத்த முடித்துவிட்டோம் என்றேன். அவர் அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார். நான் "பிரான்க்" செய்கிறேன் என அவர் திரும்பக் கேட்டார். அதற்கு உண்மைதான் சார் 150 நாட்களில் படப்பிடிப்பை முடித்தோம் என்றேன். அவ்வளவு சீக்கிரத்தில் படப்பிடிப்பை முடிக்கக் காரணமாக இருந்த திட்டங்கள், செயல்முறை என்ன என்று அவர் ஆர்வத்துடன் கேட்டார்,” என அந்த பேட்டியில் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
"பாகுபலி" படத்தின் இரண்டு பாகப் படப்பிடிப்புகளும் 600 நாட்கள் வரை நடைபெற்றதாக அப்போது செய்திகள் வெளிவந்தது குறிப்பிட வேண்டிய ஒன்று.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!