
விஜயதசமி வெளியீடுகளில் தமிழ் சினிமா தொடர்புகள்
அதற்கு சில நாட்கள் முன்பாகவே வார இறுதி விடுமுறை நாட்களை வைத்து தமிழில் செப்டம்பர் 29ம் தேதி தனுஷ் நடித்துள்ள "நானே வருவேன்", செப்டம்பர் 30ம் தேதி மணிரத்னம் இயக்கியுள்ள சரித்திரப் படமான "பொன்னியின் செல்வன்" படங்கள் வெளியாக உள்ளன. இந்தப் படங்கள் மட்டும்தான் தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஒன்றுக்கொன்று போட்டியிட உள்ளன.
ஆனால், ஹிந்தியில் முக்கியப் போட்டியாக விளங்க உள்ள படம் "விக்ரம் வேதா". தமிழில் வெளிவந்த படத்தை அதே பெயரில் ரீமேக் செய்துள்ளார்கள். இந்தப் படத்திற்கு ஹிந்தித் திரையுலகத்தில் ஒரு எதிர்பார்ப்புள்ளது. இப்படத்தை தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த கணவன், மனைவியான புஷ்கர் - காயத்ரி இயக்கியுள்ளார்கள்.
தெலுங்கில் அக்டோபர் 5ம் தேதியன்று வெளியாக உள்ள படம் "காட் பாதர்" . சிரஞ்சீவி, நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்தை மோகன் ராஜா இயக்கியுள்ளார். தமிழில் குறிப்பிடத்தக்க வெற்றிப் படங்களை இயக்கியவர் மோகன்ராஜா.
"பொன்னியின் செல்வன், நானே வருவேன்" இரண்டு படங்களுமே தெலுங்கில் வெளியாக உள்ளது. "பொன்னியின் செல்வன்" கூடுதலாக கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த இரண்டு படங்களுக்கும் மற்ற தமிழ் இயக்குனர்கள் இயக்கிய படங்கள் அங்கெல்லாம் போட்டியை ஏற்படுத்தியுள்ளன. யார் படம் அதில் முன்னணி பெறப் போகிறது என்பது விரைவில் தெரிந்துவிடும்.
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!