
தொண்டு நிறுவனம் தொடங்கிய கிரித்தி ஷெட்டி
கிரித்தி ஷெட்டி சமீபத்தில் தான் சினிமாவுக்கு வந்த ஓராண்டு நிறைவு விழாவை கொண்டாடினார். இதை முன்னிட்டு அவர் நிஷ்னா என்ற பெயரில் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தொடங்கி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‛‛ஓராண்டு சினிமா பயணம் மகிழ்ச்சியாக இருந்தது. இதற்கு காரணமாக இருந்த அனைருக்கும் எனது நன்றி. எனது வாழ்க்கை பயணத்தில் புதிய அங்கமாக "நிஷ்னா" என்ற பெயரில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கி இருக்கிறேன். நிஷ்னா என்பது எனது பெற்றோர்களின் பெயர்களை இணைத்து உருவாக்கப்பட்ட சொல். இந்த தொண்டு நிறுவனத்தின் மூலம் என்னால் இயன்ற உதவிகளை எனது ரசிகர்களுக்கும், மக்களுக்கும் செய்ய இருக்கிறேன். இதற்கு உங்களின் வழிகாட்டுதலும், ஆதரவும் வேண்டும்"" என்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!