
வெந்து தணிந்தது காடு சக்சஸ் பார்ட்டியில் சிவகார்த்திகேயன்
இரண்டாவது வாரத்தில் தியேட்டர்கள் குறைந்த நிலையில் படத்தின் சக்சஸ் பார்ட்டியைக் கொண்டாடியிருக்கிறது படக்குழு. அதில் சிலம்பரசன், கவுதம் மேனன் உள்ளிட்ட படக்குழுவினரும் சிறப்பு அழைப்பாளர்களாக சில சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். அதில் சிவகார்த்திகேயனும் ஒருவர். சிம்பு படத்தின் சக்சஸ் பார்ட்டியில் சிவகார்த்திகேயன் இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
"வெந்து தணிந்தது காடு" படத்தின் வெற்றிக்காக அதன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், சிம்புவுக்கு 1 கோடி ரூபாய் மதிப்புள்ள காரையும், இயக்குனர் கவுதம் மேனனுக்கு ஓரிரு லட்சம் மதிப்புள்ள பைக்கையும் பரிசாக அளித்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!