
டபுள் சந்தோஷத்தில் ஜெயம் ரவி குடும்பத்தினர்
இரண்டாவது சந்தோஷம் ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா, தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவியை இயக்கியிருப்பது. அந்தக் கூட்டணியின் படமான "காட் பாதர்" தெலுங்குப் படம் அக்டோபர் 5ம் தேதி வெளியாக உள்ளது. அதனால், இந்த வருட விஜயதசமி ஜெயம் ரவி குடும்பத்தினருக்கு டபுள் சந்தோஷத்துடன் மறக்க முடியாத ஒரு நாளாக அமையப் போகிறது.
தமிழில் "பொன்னியின் செல்வன்" படமும், தெலுங்கில் "காட் பாதர்" படமும் இந்த வருடத்தின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்கள்.
ஜெயம் ரவி, மோகன் ராஜாவின் அப்பா எடிட்டர் மோகன் ஒரு தயாரிப்பாளர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஜெயம் ரவியின் மாமியாரும் ஒரு தயாரிப்பாளர். ஜெயம் ரவி, மோகன் ராஜா சார்ந்த உறவினர்கள், குடும்பத்தார் அனைவருக்கும் இரண்டு படங்களும் வெற்றி பெற்றால் பெரும் சந்தோஷமாக அமையும்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!