ஹாலிவுட்டில் தடம் பதிக்கிறார் ராஜமவுலி
செப் 24, 2022
Advertisement
ஹாலிவுட் சினிமாவை இந்தியா நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தவர் எஸ்.எஸ்.ராஜமவுலி. அவர் இயக்கிய பாகுபலி, ஆர்ஆர்ஆர் படங்கள் உலக அளவில் வெற்றி பெற்று ஆயிரம் கோடிக்கு மேல் வசூலையும் குவித்தது. அடுத்து அவர் ஹாலிவுட் படம் இயக்க வாய்ப்பு வந்தபோதும் இந்திய படங்களை ஹாலிவுட்டுக்-கு கொண்டு செல்வதே என் இலக்கு என அறிவித்து தற்போது மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். அடுத்து தனது கனவு படைப்பான மகாபாரத்தை 3 பாகங்களாக இயக்க இருக்கிறார்.
இந்த நிலையில் ராஜமவுலியுடன் ஹாலிவுட் நிறுவனம் ஒன்று கைகோர்த்திருக்கிறது. கிரியேட்டிவ் ஆர்ட்டிஸ் ஏஜென்சி (சிஏஏ) என்ற நிறுவனம் ஹாலிவுட் படங்களை உலகம் முழுக்க சந்தைப்படுத்தும் பணியை செய்து வருகிறது. இந்த நிறுவனம் ராஜமவுலியுடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி இனி ராஜமவுலி இயக்கும் படங்களை ஹாலிவுட் உள்ளிட்ட உலக சந்தைப்படுத்தும் பணியை இந்த நிறுவனம் செய்ய இருக்கிறது. மகேஷ் பாபு நடக்கும் படத்தில் இருந்து இந்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வருகிறது.

Tags
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!