
போண்டா மணிக்கு கண்டிப்பாக உதவி செய்வேன்: வடிவேலு
அப்போது, தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் ஹீரோவாகவும், மாமன்னனில் குணச்சித்திர வேடத்திலும், சந்திரமுகி-2வில் காமெடி வேடத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறேன். இந்த படங்களில் மக்கள் எதிர்பார்க்கும் காமெடிகள் இன்னும் அதிகமாக இருக்கும். அதோடு, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் பின்னணியும் பாடியிருக்கிறேன். அந்த பாடல் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெரும் என்று தெரிவித்திருக்கும் வடிவேலு, ஏற்கனவே என்னுடன் நடித்த நடிகர்களுக்கு ஏற்ற காமெடி டிராக் தற்போது இல்லாததால் மீண்டும் அவர்களுடன் சேர்ந்து நடிக்க இயலவில்லை. அதோடு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் போண்டா மணிக்கு கண்டிப்பாக என்னால் இயன்ற உதவி செய்வேன் என்றும் வடிவேலு தெரிவித்திருக்கிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!