
நாகசைதன்யா- வெங்கட்பிரபு படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர்
இளையராஜாவும், யுவன் சங்கர்ராஜாவும் இணைந்து இந்த படத்திற்கு இசை அமைக்கிறார்கள். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். இன்று முதல் இதன் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் நேற்று (செப்.,22) துவங்கியது. இந்நிலையில் இந்த படத்தின் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த முழு பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
ஒளிப்பதிவாளராக எஸ்.ஆர்.கதிர், தெலுங்கில் வசனகர்த்தாவாக அபூரி ரவி, எடிட்டராக வெங்கட் ராஜன், புரொடக்ஷன் டிசைனராக ராஜீவன், கலை இயக்குனராக சத்திய நாராயணா, ஸ்டண்ட் இயக்குனர்களாக ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் யானிக் பெண் மற்றும் மகேஷ் மேத்யூ ஆகியோர் பணியாற்ற உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!