
இசை ஆல்பத்தை இயக்கி நடித்த துருவ் விக்ரம்
துருவ் விக்ரம் முறைப்படி இசை கற்றவர். நல்ல பாடகரும் ஆவார். இந்நிலையில் அவர் தற்போது "மனசே" என்ற இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளார். இதனை அவரே இசை அமைத்து இயக்கியும் உள்ளார். இந்த இசை ஆல்பத்தை அவர் நேற்று யுடியூப்பில் வெளியிட்டார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த இசை ஆல்பத்தில் துருவ் நடித்தும் இருக்கிறார். அவருடன் உஜ்வால் குப்தாவும் இந்த ஆல்பத்தில் இணைந்திருக்கிறார். நடிப்பு கேரியரில் பெரிய இடைவெளி ஏற்பட்டிருப்பதால் அதை நிரப்ப இந்த இசை ஆல்பத்தை அவர் வெளியிட்டிருப்பதாக கூறப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!