
மீண்டும் மலையாளத்தில் மாளவிகா மோகனன்
கடைசியாக 2017 ல் மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான தி கிரேட் பாதர் படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மாளவிகா மோகனன். இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு மலையாள படத்தில் நடிக்கிறார் மாளவிகா. இந்த படத்தின் துவக்க விழா பூஜை நேற்று நடைபெற்றுள்ளது. கதாநாயகன் என பெரிய ஹீரோ யாரும் இந்த படத்தில் இல்லாத நிலையில் தண்ணீர் மாத்தன் தினங்கள் படம் மூலம் கவனம் ஈர்த்த இளம் நடிகர் மேத்யூ தாமஸ் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதில் ஹைலைட் என்னவென்றால் கேரள சினிமாவில் முக்கியமான எழுத்தாளர்களான இந்துகோபன் மற்றும் ஆடுஜீவிதம் நாவலை எழுதிய பென்யமின் இருவரும் இணைந்து இந்த படத்திற்கு கதை எழுதி உள்ளனர். ஆல்வின் ஹென்றி இயக்குகிறார். இளம் வயதினர் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை வைத்து இந்த படம் உருவாகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!