
சல்மான்கான், சிரஞ்சீவியை ஆட வைத்த பிரபுதேவா
இந்த படத்தில் இடம்பெறும் "தார் மார் தக்கரு மார்.." என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் வெளியிடப்பட்டிருக்கிறது. பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்த பாடலில் சிரஞ்சீவி, சல்மான் கான், பிரபுதேவா ஆகியோர் இணைந்து, நடனம் ஆடியிருக்கிறார்கள். பிரபு தேவா உடன் ஆடியிருப்பதுடன் நடன இயக்கமும் செய்திருக்கிறார். ஸ்ரேயா கோஷல் பாடியிருக்கிறார். இந்தப் பாடலை ஆனந்த ஸ்ரீராம் எழுதியிருக்கிறார்.
"காட்பாதர்" திரைப்படத்தை கொனிடேலா புரொடக்ஷன்ஸ் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆகிய முன்னணி பட நிறுவனங்களின் சார்பில் பிரபல தயாரிப்பாளர்கள் ஆர். பி. சவுத்ரி மற்றும் என். வி. பிரசாத் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். அக்டோபர் 5ம் தேதி தசரா திருவிழா நாளில் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!